சண்டை முடியவில்லை
நடிகை மாயாவும் நடிகை சீதாவும் அக்கம் பக்கத்து வீடு. பார்க்கிங் பிரச்சனையில் ஆரம்பித்த சண்டை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போய் இருவரும் கேவலப்பட்டார்கள்.
இவர்கள் மாற்றி மாற்றி சொல்லிக் கொண்ட குற்றச்சாட்டுகள் அத்தனையும் வேலை வெட்டியில்லாத வெற்று வேட்டு சமாச்சாரங்கள் என்பதை புரிந்து கொண்ட போலீஸ் இருவரையும் எச்சரித்து அனுப்பியது.
இரண்டுமே சொந்த வீடு என்பதால் வீட்டை காலி செய்து கொண்டு கூட போக முடியாதளவுக்கு லாக் ஆகிவிட்டார்கள். இவர்களில் சீதாவுக்குதான் பெரிய பிரச்சனையாம். படம் பற்றி பேசுவதற்கு யாராவது இவர் வீட்டுக்கு வந்தால் கூட வேறு நோக்கத்தோடு வந்திருக்கிறார்கள் என்றும், உள்ளே கசமுசா நடப்பதாகவும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் அடித்துவிடுகிறாராம் மாயா. இந்த இருவரையும் எப்படி சமாளிப்பது என்று விழி பிதுங்கி கிடக்கிறார்கள் அதிகாரிகள்.
புதியவர் படத்தில் ஸ்ருதி கமல்
யாரும் நெருங்க முடியாத உயரத்தில் இருக்கிறார் ஸ்ருதி கமல். கால்ஷீட் விஷயத்தில் மட்டுமல்ல, தங்கள் படத்தில் பாட வைக்க வேண்டும் என்றால் கூட இவரை அணுகுவது அவ்வளவு எளிதல்ல என்கிறார்கள்.
இந்த நேரத்தில் எப்படியோ ஸ்ருதியை பாட வைத்துவிட்டார் ஒரு இசையமைப்பாளர். அதுவும் புது இசையமைப்பாளராம் அவர். எப்படி நடந்தது இந்த வித்தை? இந்த அறிமுக இசையமைப்பாளர் கத்ரி கோபால் நாத்தின் வாரிசுதானாம்.
இந்த ஒரு குவாலிபிகேஷன் போதாதா? வருகிறேன் என்று கூறிவிட்டாராம் ஸ்ருதி. போதாதற்கு இன்னொரு விஷயத்தையும் சொன்னார்களாம்.
இந்த படத்தின் ஹீரோ முதல்வரின் பேரன் என்பதுதான் அது. அருள்நிதி நடிக்கும் உதயன் என்ற படத்தில்தான் இத்தனை சிபாரிசுடன் பாடி முடித்திருக்கிறார் ஸ்ருதி.
ராதாவை அதிர்ச்சியூட்டிய நடிகர்
பல வருஷம் கழிச்சு ஃபீல்டுக்குள்ளே வந்ததால் பெரும் குழப்பம் வந்து சேர்ந்திருக்கிறது ராதாவுக்கு. யார் பெரியவர்? யார் சிறியவர்? என்பது கூட தெரிவதில்லையாம். முன்பெல்லாம் முக்கியஸ்தர்கள் என்று அடையாளம் காட்ட குறிப்பிட்ட சிலர் இருப்பார்கள்.
காலகாலமாக சினிமா தொழில் செய்து வருகிறவர்கள் அவர்கள். அதனால் சட்டென்று அடையாளம் கண்டு கொள்ளலாம். ஆனால் இப்போது அப்படியா? நேற்று ஒருவர். இன்று ஒருவர் என்று புதிது புதிதாக ஆட்கள் வருகிறார்கள். அவர்களை எந்த விதத்தில் எடை போடுவது என்றும் தெரியாமல் தவிக்கிறாராம் ராதா.
அவரை இந்தளவுக்கு புலம்ப விட்டது வேறு யாருமல்ல, தமிழ்சினிமாவை ஒரு உலுக்கு உலுக்கி கொண்டிருக்கும் டாக்டர் சீனிவாசன்தானாம். ஒரு கோடி சம்பளம், எங்க படத்தில் நடிக்க முடியுமா என்று ஒரு மேனேஜரை து£து அனுப்பினாராம் கார்த்திகாவின் கால்ஷீட் வாங்க.
ஒரு கோடி சம்பளம் என்றால் ஒரு நப்பாசை வரும்தானே? யாரு என்னன்னு விசாரித்த ராதாவுக்கு பேரதிர்ச்சி. பின்னே, டாக்டருடைய போட்டோவை காட்டி இவர்தான் ஹீரோன்னா அதிர்ச்சி வராதா என்ன?
எது முதலில்? -பரத் குழப்பம்
ஒரே நேரத்தில் மூன்று படங்கள் வரிசை கட்டி நிற்கிறது பரத்திற்கு. இதில் வானம் படம் வெளிவருவதில் எவ்வித சிக்கலும் இல்லை. ஆனால் யுவன் யுவதி, திருத்தணி ஆகிய இரு படங்களுக்குதான் சிக்கலாம். திருத்தணியை முதலில் கொண்டு வந்துவிடலாம் என்கிறார் அப்படத்தின் இயக்குனர் பேரரசு.
ஏனென்றால் வானம் வந்தால் சூப்பர் ஹிட் ஆகும். அந்த சூறாவளி காற்றில் தனது திருத்தணியும் அடித்துக் கொண்டு போய்விடும் என்பது அவரது நம்பிக்கை. ஆனால் திருத்தணி மீது நம்பிக்கையே இல்லையாம் பரத்திற்கு. அதனால் யுவன் யுவதி முதலில் வரட்டுமே என்கிறாராம்.
இருவரது மல்லுக்கட்டுக்கு நடுவில் சிக்கிக் கொண்டிருக்கும் இவ்விரு படங்களையும் வாங்க ஒரு விநியோகஸ்தர் கூட முன்வரவில்லை என்பதுதான் இந்த விஷயத்தில் உச்சபட்ச காமெடி.
ரஜினி கடை, சிம்ரன் கடை?
சிம்ரன் ஆப்பக்கடை என்றொரு கடை திறந்திருக்கிறார்கள் வடபழனி சிக்னலில். இது நடிகை சிம்ரனின் கடை என்றே பலரும் கூறி வருகிறார்கள். உண்மையில் இதற்கும் நடிகை சிம்ரனுக்கும் எந்த தொடர்பும் இல்லையாம்.
இதே மாதிரிதான் சாலிகிராமத்தில் இன்னொரு கடையை ரஜினிக்கு சொந்தமானது என்று கூறி வருகிறார்கள். உண்மையில் இந்த வேதனை ரஜினியே வாங்கிக் கட்டிக் கொண்டதுதானாம். பிரபல ஆர்ட் டைரக்டர் ஜி.கே ரஜினிக்கு நெருக்கமான நண்பர்.
நாட்டுபுற சமையல் மாதிரி கைக்குத்தல் அரிசியுடன், இயற்கை உணவு தயாரித்து கொடுத்தால் நன்றாக விற்பனை ஆகுமே என்று நினைத்தாராம். கடையையும் உருவாக்கி விட்டார்.
ஒரு பப்ளிசிடியாக இருக்குமே என்று ரஜினியை வைத்து கடையை திறந்தார். அவ்வளவுதான். இது ரஜினியின் கடை என்று ஊர் உலகமெல்லாம் நம்ப ஆரம்பித்துவிட்டது. போச்சுரா…
வீரப்பன் கதை. டைரக்டர் அதிர்ச்சி
காதலர் குடியிருப்பு படத்தை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் அடுத்து வீரப்பன் கதையைதான் படமாக எடுக்க திட்டமிட்டிருந்தார். ஏற்கனவே குப்பி என்ற படத்தை இயக்கி எல்லாருடைய பாராட்டுகளையும் பெற்றவர் இவர். இதனால் வீரப்பன் வரலாற்றை ஓரளவுக்கு நியாயமாக எடுப்பார் என்ற நம்பிக்கை இருந்தது மக்களுக்கு.
ஆனால் இதற்கு வீரப்பனின் மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதற்காக கவலைப்படவில்லை ரமேஷ். முத்துலட்சுமி துணையில்லாமல் கூட இந்த படத்தை இயக்குவேன் என்று அதிரடியாக அறிவித்தார். அதற்கு பொருத்தமாக இவரை கைது செய்து சிறையில் அடைத்திருந்தது கர்நாடக அரசு. இந்த நிலையில்தான் நீதிமன்ற உத்தரவுபடி வெளியே வந்திருக்கிறார் முத்துலட்சுமி. வந்தவர் முன்னைவிட வேகமாக ரமேஷ் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறார்.
ராம்கோபால் வர்மாவுக்கு அத்தனை வீரப்ப ரகசியங்களையும் சொல்ல போகிறாராம். இதற்காக ராம்கோபால் வர்மா கொடுக்கிற வெகுமதி என்ன தெரியுமா? அவர் பணம் போடும் இந்த புதிய படத்தின் தயாரிப்பாளரே முத்து லட்சுமிதானாம்.